ராணி மாதிரி பார்த்துக்கறேன்.. மனைவிமாரிடம் ஆசை காட்டிய முதலாளியை போட்டுத் தள்ளிய 3 தொழிலாளர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தங்களது மனைவியரிடம் நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன், புருஷனை விட்டு விட்டு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை கூறிய கிரானைட் தொழில் செய்து வந்த நபரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டனர் அவரிடம் வேலை பார்த்து வந்த 3 தொழிலாளர்கள்.
கொல்லப்பட்டவரின் பெயர் சுயம்புலிங்கம். 48 வயதான இவர் கிரானைட் கல் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இவர் 25 வருடத்திற்கு முன்பே கன்னியாகுமரியிலிருந்து சத்தியமங்கலம் அருகே கொடிவேரி பகுதியில் குடியேறினார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

இவரிடம் சிலர் கிரானைட் கல் பதிக்கும் வேலையில் தொழிலாளர்களாக இருந்து வந்தனர்.2 நாட்களுக்கு முன்பு கொடிவேரி அருகே பவான ஆற்று படித்துறை பகுதியில் இவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். தலை, கை, கால்கள் மற்றும் ஆணுறுப்பு ஆகியவை தனித் தனியாக வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.
சத்தியமங்கலம் டி.எஸ்.பி., மோகன் தலைமையிலான போலீசார், சுயம்புலிங்கம் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கோபியை அடுத்த காசிபாளையத்தைச் சேர்ந்த சரவண பிரகாஷ் என்பவர் இந்தக் கொலை தொடர்பாக விஏஓவிடம் சரணடைந்தார். அவரை விஏஓ வெள்ளியங்கிரி போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் கைது செய்து விசாரித்தபோது மேலும் இரண்டு பேரின் பெயரைக் கூறினார் பிரகாஷ் அவர்களது பெயர் சதீஷ், ராஜா. இருவரும் கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. 3 பேரும் சுயம்புலிங்கத்திடம் ப்ல காலமாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த 3 பேரின் மனைவிகளையும் குறி வைத்துள்ளார் சுயம்புலிங்கம். இவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களது வீட்டுக்குப் போய் அவர்களது மனைவியரிடம், உங்களது புருஷன் திருட்டு வழக்கில் தொடர்புள்ளனர். சிறைக்குப் போய் வி்டுவார்கள். கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நான் உங்களை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்துள்ளார்.
இதை அறிந்த 3 பேரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். இதற்கு உச்சமாக செப்டம்பர் 30ம் தேதி வேலையை முடித்து விட்டு 3 பேரும் மது குடிக்கப் போயுள்ளனர். அப்போது சுயம்புலிங்கமும் அங்கு வந்துள்ளார். மது போதையில் இவர்களது மனைவி பற்றி அவர் வர்ணித்துப் பேசியுள்ளார். இதனால் 3 பேரும் மேலும் கொதிப்படைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி அடித்துக் கொன்றனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி போட்டு விட்டுப் போய் விட்டனராம்.
போலீஸார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications