ஓசூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற எஸ்.ஐ. மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 3 பேர்
ஓசூர்: ஓசூர் அருகே மணல் கடத்துவதை தடுக்க முயற்சி செய்த சப் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்தகிரி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சந்தோஷ். திங்கிட்கிழமை நள்ளிரவு நேரத்தில் சந்தோஷ் தலைமையில் போலீசார் ஆனைக்கல் சாலை கொத்தஜூகூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்றது. மணல் கடத்திச் செல்லும் அந்த லாரியை நிறுத்துமாறு சந்தோஷ் சைகை செய்ய டிரைவரோ அவரை மோதுவது போல் வந்தார். இதையடுத்து சந்தோஷ் விலகி நின்றார். அங்கிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.
இதைடுத்து போலீசார் லாரி டிரைவர் கோபிநாத்(25), வாகனத்தில் இருந்த சுப்பிரமணி(48), தங்கராஜ் (37) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேருமே கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர்கள்.
மேலும் கடத்தல் மணலை ஏற்றிச் சென்ற லாரியையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications