பெண்ணிடம் கிண்டல்.. திருவல்லிக்கேணியில் இரு தரப்பினர் மோதல்.. 3 பேர் காயம்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், பெண்ணிடம் கிண்டல் செய்தது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே திடீர் மோதல் மூண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
திருவல்லிக்கேணி சுபத்ராலால் தெருவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள அப்துல்லா குறுக்குத் தெருவில் இரவில் தனியாக நடந்து போயுள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் ஒரு நபர் அப்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது வீட்டுக்கு விரைந்து வந்து தனது மகன் முகேஷிடம் இதுகுறித்து கூறியுள்ளார். கோபமடைந்த முகேஷ், சிலருடன் அந்தத் தெருவுக்குச் சென்று, தனது தாயை சீண்டியதாக கூறப்பட்ட சாதிக் அலி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாதிக் அலிக்கு ஆதரவாக சிலர் திரண்டு வந்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
இதில் முகேஷ், சாதிக் அலி மற்றும் ஷர்மிளா பேகம் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து அமைதிப்படுத்தினர். முகேஷ், சாதிக் அலி மற்றும் முகேஷின் தாயார் கொடுத்த புகார்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications