சென்னை: பைக்கில் வெடித்து வங்கியின் 5வது மாடியில் விழுந்த கேஸ் சிலிண்டர்- 3 பேர் காயம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பைக்கில் கொண்டு சென்ற கேஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறி அருகிலிருந்த வங்கிக் கட்டிட 5வது மாடியில் சென்று விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலக சாலையில் ஏ.சி.ஷோன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் குளிர்சாதன எந்திரங்களுக்கு கேஸ் நிரப்பும் பணியை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தில் கலீல், கார்த்திக் என்ற ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். இவர்கள் இருவரும் 4 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ஒன்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

நேற்று பகல் 1 மணியளவில் அவர்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கலீல் வண்டியை ஓட்டினார். கார்த்திக் பின்பக்கம் உட்கார்ந்து கேஸ் சிலிண்டரை வைத்திருந்தார். திடீரென்று அந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தார்.
கலீலும் பைக்கில் இருந்து பாலத்தின் சாலையில் விழுந்தார். அவர்கள் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இந்நிலையில் மேம்பாலம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் அடுக்குமாடி கட்டிடத்தின் 5 வது மாடியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு போய் விழுந்தது வெடித்த கேஸ் சிலிண்டர்.
இதைப்பார்த்து வங்கியில் வேலை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூச்சல் போட்டனர். அதன்பிறகு கேஸ் சிலிண்டர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர். கேஸ் சிலிண்டர் விழுந்ததில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொதுமேலாளர் ராஜ்குமார் ஷட்டர்ஜி என்பவரும் லேசான காயமடைந்தார். மேம்பாலத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர் 50 அடி உயரம் மேலே பாய்ந்து, வங்கி கட்டிடத்திற்குள் போய் விழுந்த சம்பவம் நேற்று பகலில் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications