உளுந்தூர்பேட்டை அருகே.. 8 வாகனங்கள் மோதி மூவர் பலி: 55 பேர் படுகாயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நான்கு வழி அதிவேக சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியது. அந்த பேருந்துக்கு பின்னார் வந்த 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.
அரசு பேருந்து, தனியார் பேருந்து, இரண்டு லாரிகள், 4 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் வாகனங்கள் நசுங்கின. இதில் இரண்டு கார் ஓட்டுனர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்களில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு பேருந்துகளில் இருந்த 50 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications