சென்னை நுங்கம்பாக்கம் அருகே கார் விபத்து.. 3 பேர் படுகாயம்
சென்னை நுங்கம்பாக்கம் அருகே இன்று மதியம் மேம்பாலம் கார் விபத்து ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் அருகே இன்று மதியம் மேம்பாலம் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தார்.
சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் நடைமேடையில் கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள வள்ளுவர் கோட்டம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்தி உள்ளது.
இதில் அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளது. கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications