வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. மகன் தப்பினார்... மக்கள் அதிர்ச்சி
வேலூர் அருகே மின்வாரிய ஊழியர், மனைவி மற்றும் மகளுடன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. மகன் மட்டும் உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர் , மனைவி மற்றும் மகளுடன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் தமிழரசன், என்ற மகனும் சுகன்யாஎன்ற மகளும் உள்ளனர். வீட்டின் அருகே மோகன் 2 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

இவற்றில் ஒரு கடையில் அப்பகுதியில் வசித்து வரும் ஜான்சி என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மோகன் குடும்பத்தினர் யாரும் வெளியே வராததால் ஜான்சி அவர்களின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த அவர், மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா ஆகியோர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்குவந்த போலீசார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மோகனின் மகன் தமிழரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பார்த்த போலீசார் அவர்கள் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லைப்போட்டும் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழரசனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் டிப்ளமோ படித்துள்ளார். கொல்லப்பட்ட சுகன்யா இன்ஜினியரிங் படித்துள்ளார். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டிருப்பது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அங்கு பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications