நாகூர் : அனுமதியின்றி சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகூர் அருகே அனுமதியின்றி சேவல் சூதாட்டம் நடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன் தலைமையிலான போலீசார் திட்டச் சேரி, மயிலாடுதுறை - மறையூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தாமரைக்குளம் தெருவை சேர்ந்த சந்திரசேகர், சியாம் மரைக்காயர் தெருவை சேர்ந்த வாகித், சிதம்பரம் காமராஜர் தெருவை சேர்ந்த சிவா, செய்யது இப்ராகிம் ஆகியோர் பொருட்கள் வைத்து அனுமதியின்றி சேவல் சூதாட்டம் நடத்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் சந்திரசேகர், வாகித், சிவா ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஆனால், செய்யது இப்ராகிம் மட்டும் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications