மதுரை அருகே முன் விரோதம் காரணமாக 3 பேர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: பேரையூர் அருகே முன் விரோதம் காரணமாக மர்மகும்பல், 3 பேரை வெட்டிப்படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெயராம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முத்தையா ( 22), கருப்பசாமி (24) மற்றும் பாண்டி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

3 persons brutally killed in Madurai

இந்நிலையில், இன்று காலை பத்திர பதிவு அலுவலகத்துக்கு மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தம்பிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த அம்பாசிடர் கார் இவர்கள் மீது மோதியது. கீழே விழுந்த அவர்களை, காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் மூவரும் பலியாயினர். இதுகுறித்து, பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+