சென்னை ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள்! ஓட ஓட விரட்டி பிடித்த போலீசார்
Recommended Video

சென்னை: சென்னையிலுள்ள பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில், மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் சக பயணிகளை அச்சுறுத்துவதாகவும், ரயில்வே பாதுகாப்பு படைக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு போலீசார், ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டவர்களை ஒவ்வொரு ரயில் பெட்டியாக தேடினர். போலீசார் தேடுவதை பார்த்ததும், மாணவர்கள் ஓட்டம் பிடிக்க துவங்கினர்.

விரட்டி பிடித்தனர்
அவர்களை விரட்டிச் சென்ற பாதுகாப்பு போலீசார் 3 மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர்கள் என தெரியவந்தது.

விசாரணை
மாணவர்கள் பெயர், கவியரசு, மருதுபாண்டி, சோமசுந்தரம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகள், பட்டாசு உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாமாண்டு மாணவர்கள்
முதலாமாண்டு மாணவர்களே இப்படி ரவுடித்தனத்தில் ஈடுபட்ட சம்பவம் கல்வியாளர்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னையில் இப்படி நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பதும் அவர்கள் கவலைக்கு காரணம்.

தொடர் கதை
சில மாதங்கள் முன்பு, சென்னை - ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தியபடி பயணம் செய்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கத்தியுடன் திரிந்த 4 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார் 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். அந்த 4 பேரும் இனி வாழ்க்கையில் ரயிலில் ஏறவே மாட்டோம் எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கதறும் காட்சி வெளியாகியிருந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications