காகித ஆலையில் விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி... சிவகாசி அருகே!
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தனியார் காகித ஆலையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே சுபாஷ்சிங் மற்றும் ஹோமா ஆகியோருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது.இந்த ஆலை கடந்த இருமாதங்களாக மூடப்பட்டிருந்ததாம். இந்நிலையில் ஆலையை மீண்டும் இயக்க வைக்க ஒவ்வொரு பகுதியாக பராமரிப்பு பணிகள் சிலநாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மின்சாரம் தொடர்பான பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இதில் வடமலாபுரம் பரத்தாழ்வார் மகன் மாரீஸ்வரன்(46), விளாத்திகுளம் கருப்பசாமி் மகன் இளையராஜா(34)ஆகிய இரு எலெக்ட்ரீசியனுடன், கண்காணிப்பாளர் நமஸ்கரித்தான்பட்டி ராமர் மகன் சர்க்கரை(36) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆலையின் இயந்திர பகுதியை விடுத்து, ஆலை வளாகத்தில் மின்விளக்குகள் பழுதுநீக்குதல் மற்றும் புதிய விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
மாலை சுமார் 3.30 மணியளவில் மின்விளக்கு பொருத்துவதற்கு உயரமான இரும்பாலான ஏணியை மூவரும் கையால் தள்ளிக்கொண்டு சென்றபோது,ஆலை வளாகத்தில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி காற்று அடித்ததால், ஏணியின்மீது மின்கம்பி தட்டியதாம்.இதையடுத்து ஏணியில் மின்சாரம் தாக்கியதில் ஏணியை கையால் பிடித்திருந்த மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications