கோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா?
கோவிலில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: கோயிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சூளைமேடு கோயில் பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு பகுதியில் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவர்களின் 3 வயது பேத்தி தாத்தா பாட்டியைக் காண வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் உதயகுமார்.

குழந்தையை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் அவர். சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பும்போது, குழந்தை இங்கேயே விளையாடட்டும், நான் பாத்துக்கொள்கிறேன் என்று பூசாரி கூறியுள்ளார். அதை நம்பிய பாட்டியும் குழந்தையை விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார். சில நிமிடங்களில் பூசாரி தன் கோர குணத்தை காட்டியுள்ளான்.
சிறு குழந்தை என்றும் பாராமல் அதனை கோயிலின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, நடந்ததை ஒழுங்காக சொல்ல கூட தெரியாமல் கதறியது.
என்னவாயிற்று என தெரியாமல் விழித்துள்ளார் பாட்டி. பின்னர் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தபோது, வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து பாட்டி பதறினார். அதற்குள் அக்கம்பக்கத்திலும் ஆட்கள் கூடிவிடவே, ஆத்திரமடைந்த அனைவரும் சேர்ந்து பூசாரியை அடித்து துவைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மகளிர் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பூசாரி உதயகுமாரை போஸ்கோ சட்டப்பிரிவின்கீழ் கைது செய்தனர்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போஸ்கோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் சிறுமி படுகொலையில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அதற்குள் பூசாரியின் வழக்கு முதல் வழக்காக இருக்குமா என தெரியவில்லை. அதுமட்டுல்லாமல் 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டாலும் இதே தண்டனையை அவர்களுக்கும் அமல்படுத்தவேண்டும். பலாத்காரத்தில் 6 என்ன 60 என்ன? விருப்பமில்லாமல் செய்யும் அனைத்துமே பலாத்காரம்தான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications