3 வயதுக் குழந்தை பாலியல் பலாத்காரம் - தருமபுரி இளைஞர் கைது!
தர்மபுரி: தர்மபுரி, காரிமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம், சென்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 3 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்தது.

அவரது தாய் அருகில் உள்ள உறவினர் வீட்டில் பூ கட்டிக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை அலறல் கேட்கவே அவரது தாய் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது அவரை தள்ளி விட்டுவிட்டு வாலிபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை பார்த்த போது குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாய் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, தப்பி ஓடிய வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அந்த வாலிபர் அதே ஊரை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்து பொதுமக்கள் காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு மற்றும் போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications