புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலெட்சுமி மெடிக்கல் கல்லூரியியை இணையதளம் மூலம் விற்க முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்க வீட்டுல இருக்கிற பழைய பொருட்களை விற்க ஓ.எல்.எக்ஸ் இருக்கு அப்லோட் பண்ணுங்க என அடிக்கடி டிவியில் விளம்பரம் அடிக்கடி வந்துபோகிறது. இந்த ஓ.எல்.எக்ஸ் மூலம் ஒரு மருத்துவகல்லூரியையே விற்க முயன்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் தனலெட்சுமி கல்வி நிறுவனம், திருச்சி, பெரம்பலூர், சென்னை என 16க்கும் மேற்பட்ட பொறியியல், மருத்துவக்கல்லூரிகள், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது.
இதில் தனலெட்சுமி மருத்துவக்கல்லூரியை 700 கோடிக்கு விற்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் (olx.in) விளம்பரம் வந்தது.
இதனால் கல்லூரிக்கு எண்ணற்ற விசாரணைகள் வரவே இது தொடர்பாக தனலெட்சுமி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன், கண்ணன் மகன் கதிரவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
இணையதளம் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியை விற்க முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications