ஓடும் ரயிலில்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- சென்னையைச் சேர்ந்த மூவர் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி மேற்குபாளையம் என்ற ஊரைச்சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் சென்னையில் உள்ள பிரபல பேக்கரியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி தமிழரசி (வயது-34). இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கின்றனர்.
தங்களின் சொந்த ஊருக்கு வருவதற்காக தமிழரசி மட்டும் தனியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் சனிக்கிழமை ஈரோட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.
முன்பதிவு செய்யப்படும் பெட்டியில் அவர் டிக்கெட் வாங்கி பயணம் செய்துள்ளார். சனிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்பட்டது. இவர் பயணம் செய்த பெட்டியில் 13 இளைஞர்கள் சென்னையில் ஏறியுள்ளனர்.
இரயிலில் வரவர தனது இருக்கைக்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் தமிழரசிக்கு "பாலியல்" தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார்களாம். அவரது சுடிதார் துப்பட்டாவைப் பிடித்து இழுப்பது, தண்ணீர் பாட்டிலை அவர் மீது வீசுவது, ஆபாச வார்த்தைகள் மற்றும் இரட்டை பொருள்படும் வார்த்தைகளில் பேசுவது எனப் பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்தாகதெரிகிறது.
இவர்கள் பயணம் செய்த சேலம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் தமிழரசி இரயில்வே போலீஸில் அவர் புகார் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவர் ரயிலில் இருந்து இறங்கி போலீஸ் நிலையத்துக்குச் செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது.
இதையடுத்து, வேறு ஒரு பெட்டியில் எரிய தமிழரசி அங்கிருந்த "டிக்கெட்" பரிசோதகர் மூலமாக ஈரோடு ரயில்வே போலீஸருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஈரோடு இரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீஸார், தமிழரசி பயணம் செய்த பெட்டிக்கு அருகில் தயாராக காத்துக்கொண்டு இருந்தனர். இரவு 9.15-க்கு ரயில் ஈரோடு வந்தவுடன் போலீஸார் விரைந்து சென்று சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் பிடித்தனர்.
போலிஸ் விசாரணையில் அவர்கள், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கட் நாராயணன் (வயது-25), வீரப்பன் (வயது 27), லாரன்ஸ் (வயது 23) என்பது தெரியவந்தது. ரயிலில் வந்த 13 இளைஞர்களும், தங்களின் நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்ப்பதற்காக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்ததாக தெரிவித்தனர்..
கைது செய்யப்பட்ட இளைஞர்கல் மூவர் மீதும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஈரோடு நடுவர் நீதிமன்றம் (எண்.2-இல்) ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சாய்ரா பானு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, மூவரையும் போலீசார் ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications