வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள கட்லா மீன்.. உடுமலை மீனவர்கள் மகிழ்ச்சி

உடுமலைப் பேட்டை மீனவர்கள் வலையில் 30 கிலோ எடை கொண்ட கட்லா வகை மீன் சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: உடுமலைபேட்டை அருகே உள்ள திரூமூர்த்தி அணையில் மீன் பிடித்த போது மீனவர்களின் வலையில் 30 கிலோ எடையுள்ள மீன் சிக்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திரூமூர்த்தி அணை. தற்சமயம் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வரும் நிலையில் இங்கு பெரிய மீன்கள் மீனவர் வலையில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில் உடுமலையில் உள்ள தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் கடைக்கு இன்று சுமார் 30 கிலோ எடையுள்ள கட்லா வகை மீன் ஒன்று வந்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 30kg fish caught at thirumoorthy dam

சுமார் 30 கிலோ எடையுள்ள மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் வெட்டப்பட்ட அந்த மீனை வாங்கி சென்றனர். வழக்கமாக 5 கிலோ எடையுள்ள மீன்களே அணைப்பகுதியில் கிடைத்து வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுதுதான் 30 கிலோ எடையுள்ள மீன் கிடைத்து உள்ளதாக மீன் விற்பனையாளர் அசோக் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+