சம்பத் கமிட்டி அறிக்கை எரிப்பு... 35 த.ம.மு.க.வினர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீதிபதி சம்பத் கமிட்டியின் நகலை எரித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு பரமக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு நடத்தது தொடர்பாக அரசின் சார்பில் நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவினர் பரமக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது சரிதான் என்று அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருப்பசாமி, இளைஞரணி தலைவர் தேவபிரியன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதிபதி சம்பத் குழுவினரின் விசாரணை அறிக்கை நகலையும், நீதிபதியின் உருவப்படத்தையும் திடீரென்று தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35பேரையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications