ப.சிதம்பரத்திற்கு 2 இடங்களில் கருப்புக் கொடி.. நாலே நாலு பேர் கைது!
ராஜபாளையம்: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று ராஜபாளையம் அருகே நான்கு பேர் கருப்புக் கொடி காட்டிக் கைதானார்கள்.
ராஜபாளையத்தில் ராஜுக்குள் சமுதாயத்திற்குச் சொந்தமான ஆடவர் கல்லூரி உள்ளது. சமீபத்தில் இந்தக் கல்லூரியை இரு பாலினர் கல்லூரியாக மாற்றினர்.
ஆனால் இப்படி மாற்றியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அச்சமுதாயத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. மேலும் ப.சிதம்பரத்தையும் அது விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அக்கல்லூரியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடந்தது. அதற்கு ப.சிதம்பரம் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் ப.சிதம்பரத்திற்குக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜு அறிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை இன்று அதிகாலையில் போலீஸார் கைது செய்து கூட்டிச் சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று ப.சிதம்பரம் ராஜபாளையம் வந்தபோது 2 இடங்களில் அவருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications