மதுரை அருகே கோர விபத்து.. 20 நாள் குழந்தை, நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் பலி
மதுரை: மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20 நாள் குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் என 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமதுகாசிம். இவருடைய மகன் 36 வயதுடைய லுக்காஹக்கீம். இவருடைய மனைவி ஆயிஷா சித்திக். மகன் இம்ரான். லுக்காஹக்கீமின் உறவினரான சபீதாபானுவுக்கு மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 20 தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தையை பார்க்க லுக்காஹக்கீம் குடும்பத்துடன், திருச்சியில் இருந்து மதுரை சென்றார். பின்னர், சபீதாபானு மற்றும் 20 நாள் கைக் குழந்தை, அவருடைய மனைவி ஆயிஷா சித்திக், மகன் இம்ரான் ஆகிய 5 பேரும் காரில் திருச்சி நோக்கி லுக்காஹக்கீம் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்.
எதிர்புறத்தில், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 42 வயதான செந்தில்குமரன் என்பவர் மதுரை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். இவர் மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகரும் ஆவார். இவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் சாய்கவின், மகள் சாய்தென்றல் ஆகியோரும் அந்த காரில் வந்து கொண்டிருந்தனர்.
லுக்காஹக்கீம் ஓட்டி வந்த கார், கொட்டாம்பட்டி அருகே உள்ள சீயந்தான்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கார், நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி எதிரே வந்து கொண்டிருந்த செந்தில்குமரன் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
எதிர் பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே கார் ஓட்டி வந்த லுக்காஹக்கீம் பலியானார். அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்சு மூலம் கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை, செந்தில்குமரனின் மகள் சாய்தென்றல் ஆகியோர் இறந்தனர். இதுபோல் தனியார் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் சாய்கவின் இறந்து இறந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமரன், விஜயலட்சுமி, ஆயிஷா சித்திக், இம்ரான், சபீதாபானு ஆகிய 5 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications