கரூரில் 33 வேட்பு மனுக்களில் 4 மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த 33 பேரில் 4 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதிமுக, திமுக உள்பட மொத்தம் 33 வேட்பாளர்கள் கரூரில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது அதிமுக வேட்பாளர் த்ம்பித்துரையின் மாற்று வேட்பாளர் அரியூர் சுப்பிரமணி, தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனின் மாற்று வேட்பாளர் மலர்க்கொடி உள்பட 4 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தற்போது களத்தில் 29 பேர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications