விதிமுறையை மீறி ராகிங்... நெல்லை கால்நடை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!
கல்லூரியில் ராகிங் செய்ய கூடாது என்பதையும் மீறி ராகிங் செய்த நான்கு மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருநெல்வேலி : நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை இணைந்து ராமையன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து ராகிங் செய்யப்பட்டு வருவதாக புகார் அடிக்கடி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் முதலாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை அழைத்து ஆத்தி சூடியை மனப்பாடமாக ஓப்புவிக்க கூறியுள்ளனர்.

ஆத்திச்சூடி ஒப்பிக்க தெரியாதவர்களுக்கு அவர்கள் சொல்ல மறந்த வார்த்தைகளை இம்போஷிஷன் எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு பொம்மலாட்டத்தை காட்டி அதை போல் ஆடுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். உடனடியாக டீன் மானூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தினேஷ்குமார், குருசாமி, சுரேஷ், வெற்றிவேல் ஆகிய நான்கு மாணவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே நான்கு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications