தொடரும் அட்டூழியம்... மேலும் 4 தமிழக மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மேலும் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துக்கு வந்த இலங்கைப் படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது அவர்களை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளுக்குள் இறங்கி மீனவர்களைத் தாக்கினர். அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி கடலுக்குள் வீசி எறிந்துள்ளனர்.
அதோடு, பால்ராஜ் என்பவரது படகை சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர், அதிலிருந்த 4 மீனவர்களை கைது செய்தனர்.
பின்னர், மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி, 4 பேரையும் ஜனவரி 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் மூலம், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் மீனவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications