அரக்கோணம் - கடித்துக் குதறிய வெறிநாய்... பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய்க் கடித்து குதறியதில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கணபதியூர் காடு பகுதியில் வசித்து வருகிறார் பாலாஜி. இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் நிர்மல் ராஜ் 4 வயது சிறுவன். இச்சிறுவன் கடந்த 27 ம் தேதி மாலை நேரத்தில் வீட்டிற்கு பின்புறம் இருந்த வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அப்பகுதியில் இருந்து சிறுவனின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. அருகிலிருந்தவர் அப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் நிர்மல் ராஜை தெருநாய் கடித்துக் குதறிக் கொண்டு இருந்துள்ளது.
நிர்மல்ராஜின் கை, வாய், கால் உள்ளிட்ட பகுதிகளை தெருநாய்க் கடித்து குதறியுள்ளது. இதில், சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 45 நாள்களாக சிறுவனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுவனின் சடலம் வீட்டுக்கு கூட கொண்டு செல்லப்படாமல் நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளசது.,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வளர்ப்பு நாய், சிறுவன் மற்றும் சிறுமியை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கச் செல்கின்றன. இதனால், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications