ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை... காஞ்சிபுரத்தில் துணிகரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகில் ஊத்துகாடு பகுதியில் வீட்டுக்குள் ஆள் இருந்தபோதே நள்ளிரவில் உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அண்ணாதுரை. இவர் தன் குடும்பத்துடன் ஊத்துகாடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு அறையில் அவரது குடும்பத்தினரும் வீட்டின் வெளிப்பகுதியில் அண்ணாதுரையும் உறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது பின்பக்க கதவின் வழியாக வந்த மர்ம நபர்கள் உறங்கி கொண்டு இருந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
பின்னர் காலை வந்து பார்த்த போது பீரோ கலைக்கப்பட்டு அதிலிருந்த நகைப்பெட்டிகள் வெளியே வீசபட்டு இருந்தன. அதை திறந்து பார்த்த பின் நகை கொள்ளை போனது குறித்து அறிந்து கொண்ட அண்ணாதுரை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். வீட்டின் உரிமையாளர் இருந்தபோதே நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications