திருப்பதியில் ராஜபக்சே- நடுக்கடலில் 43 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது சிங்கள கடற்படை!!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புகளை மீறி திருப்பதிக்கு ராஜபக்சே வந்திறங்கிய நேரத்தில் நடுக்கடலில் 43 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சிங்கள கடற்படை அட்டூழியம் செய்துள்ளது.
நடுக்கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்து சிறையிலடைப்பதும் பின்னர் திடீரென விடுவிப்பதும் வாடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள கடற்படை.

இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு மகிந்த ராஜபக்சே திருப்பதிக்கு நேற்று வந்தார். அவருக்கு தமிழகத்திலும் ஆந்திராவிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதே நேரத்தில் நடுக்கடலில் 43 தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் நாகப்பட்டினம், காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள்.
ஏற்கெனவே 38 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications