ஒரு அரசு வாகனமும் ஆர்.கே.நகருக்குள் நுழையக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் நுழைவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பணப் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தனியாக குழுக்கள் அமைத்துள்ளது. வாக்குப்பதிவையொட்டி கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆய்வுக்குழு அனுப்பிய அறிக்கையில் படி தேர்தல் ஆணையம் சில அதிரடி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆர்.கே.நகரில் கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் தொகுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உயர் அதிகாரிகளின் கார்களாக இருந்தாலும் சோதனை நடத்திய பிறகே தொகுதிககுள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு உயர் அதிகாரிகள், கூடுதல் காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், நகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பறக்கும் படையில் மத்திய அரசு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். 24 மணிநேரமும் செயல்படும் பறக்கும் படையினரை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்காக கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications