கடலூர்: பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய ஐவர் கைது
திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்த பாதிரியார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் சுமதி (13, பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,சந்திரா (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆகிய இருவரும் கடந்த மாதம் 11ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற போது மாயமானார்கள்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர். மாணவிகள் வைத்திருந்த செல்போன் நம்பரின் சிக்னலை ஆராய்ந்தபோது இருவரும் விருத்தாசலம், புதுச்சேரி கோலியனூர், வடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்த தகவல் தெரியவந்தது.
கடைசியாக அவர்கள் வடலூரில் இருந்தபோது சதீஷ்குமார் என்பவருடன் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. உடனே சதீஷ்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அவனது போன் மூலம் மாணவிகளிடம் பேசி அவர்களை திட்டக்குடி வரவைத்து போலீசார் பிடித்தனர்.
கடலூர் ஏடிஎஸ்பி முரளி தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் மாணவிகளை பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

பாதிரியார் பலாத்காரம்
மாணவிகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. காணாமல் போன மாணவிகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். அங்குள்ள பாதிரியார் அருள்தாஸ் இருவரையும் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல் தொழில் கும்பல்
இது தெரிந்ததும், திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பின்னர் இருவரையும் விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார்.

ரூ.25000க்கு விற்பனை
2 நாள் வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

ஊர் ஊராக பயணம்
புதுச்சேரி வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் மாணவிகளை தங்க வைத்து சிலருக்கு சதீஷ்குமார் விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார், பாதிரியார் அருள்தாஸ்(60), சதீஷ்குமார்(28), லட்சுமி(30), கலா(48), ஜெமினா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து திட்டக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் மாணவிகள் இருவரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

அரசியல்வாதிகளுக்கு விருந்து
மாணவிகள் 2 பேரையும் யார் யாருடன் விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள் என போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஒரு பெண்ணிடம் சிக்கியிருந்த நேரத்தில் அரசியல் வாதிகள் பலரும் தங்களிடம் வந்து சென்றதாக அவர்கள் கூறினார்கள்.

முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்
எனவே மாணவிகளை வேட்டையாடிய அந்த அரசியல் தலைவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிகளை அரசியல்வாதிகளிடம் அனுப்பி வைத்த அந்த பெண் சொகுசுகார், பங்களா வீடு என வசதியாக வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.

பாதை மாறிய மாணவிகள்
பள்ளி மாணவிகளை பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications