கல்லூரி வேன் மீது லாரி மோதல்.. 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலி… 8 பேர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதியது. இதில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இன்று மாலை 4 மணி அளவில் ஐயப்பா கல்லூரி வேன் ஒன்று 18 மாணவிகளை ஏற்றிக் கொண்டு தக்கலை அருகில் புலியூர்குறிச்சியில் என்ற இடத்திற்கு வந்தது. அப்போது, திடீரென்று எதிரில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மஞ்சு, சிவரஞ்சனி, தீபா, சங்கீதா உள்ளிட்ட 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

படுகாயம் அடைந்த 8 மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் நாகர்கோயில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதால் அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications