கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர் செல்போனில் கதறிய பரிதாபம்..!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் செல்போன் மூலம் வெளியில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு தன்னையும், தன்னுடன் சிக்கியுள்ள 5 பேரையும் காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
ஆனால் தற்போது அவரது செல்போன் ஆப் ஆகி விட்டதால் அவர் மற்றும் உடன் இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
நேற்று நடந்த இந்த பெரும் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்த வருகின்றன. அப்போது கட்டடத்தின் பின் பகுதியில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒருவர் செல்போனில் பேசினார்.

தன்னுடன் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உள்ளே இருட்டாக இருப்பதாகவும், மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துத் தங்களைக் காப்பாற்றுமாறு கூறி கதறினார். அதன் பிறகு அவரது போன் ஆப் ஆகி விட்டது.
உள்ளே இருந்த மற்றவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
விபத்து நடந்த கட்டடம் இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு வந்தது. இரண்டும் தலா 11 மாடிகள் கொண்டவை. ஒவ்வொரு மாடியிலும் 4 வீடுகள் வரை இரு கட்டடங்களிலும் மொத்தம் 88 வீடுகள் உள்ளன.
இதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது. இந்த கட்டத்தின் இரு பக்கமும் திறந்த வெளி இருப்பதால் அந்தப்பகுதியில் இருந்தவாறு எந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணி நடைபெறுகிறது.
இதற்கிடையே, கட்டடத்தின் 3-வது பக்கம் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் உள்ளது. அந்த சுவரை இடித்து விட்டு அதன் வழியே மீட்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. 4-வது திசையில் மற்றொரு 11 மாடி கட்டிடம் இருப்பதால் அதன்வழியே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு 11 மாத கட்டடத்தின் அருகில் சிறிய அபார்ட்மெண்ட்கள் உள்ளன. அதில் வசித்து வந்த குடும்பங்கள் முன் எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
இடிந்த கட்டடத்தில் இருந்து 2.கி.மீ. தொலைவில் மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. 11 மாடி கட்டடம் இடிந்ததும் விமான நிலையம் வரை கரும்புகை மண்டலம் காணப்பட்டது. புகை மண்டலம் விலகி இயல்பு நிலைக்கு திரும்ப அரை மணி நேரம் ஆனது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications