லாரி மீது மினி லாரி மோதி விபத்து.. சாலையோரம் நின்றிருந்த 5 பேர் பரிதாபப் பலி
சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது வெண்பன்றிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி மோதிய விபத்தில், சாலையோரம் நின்றிருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற லாரி, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியே சென்னையில் இருந்து கேரளாவுக்கு வெண்பன்றிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரியின் அருகே நின்றுக்கொண்டிருந்த முத்துக்குமார், சுப்பிரமணியன், ஆறுமுகம், மினிலாரியின் உதவியாளர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணைய் நல்லூர் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications