இன்றும் 6 விவசாயிகள் பலி... பலி எண்ணிக்கை 100ஐ தொடும் கொடுமை.. இன்னும் தொடரும் அச்சம்!
வறட்சியின் காரணமாக இன்றும் 6 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். என்றைக்குத்தான் இந்த கொடுமைகள் தீருமோ என்று தலைமையில் அடித்துக் கொண்டு உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
தஞ்சை: விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 விவசாயிகள், பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலை மரணமும், மாரடைப்பு மரணமும் அன்றாட செய்திகளாகிவிட்ட நிலையில் இதற்கான தீர்வுதான் என்ன என்று உறவினர் கதறுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே பரமணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு, நீரின்றி பயிர்களி கருகியதைக் கண்டு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

அதே போன்று புதுக்கோட்டை குளவாய்பட்டியைச் சேர்ந்த குப்பமுத்து என்ற விவசாயிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயிர்கள் கருகியதால் மன உலைச்சலில் இருந்த விவசாயி குப்பமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சின்னகுமிலி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி ராமசாமியும், பயிர்கள் கருகி விவசாயம் பொய்த்துப் போன மன வேதனையில் உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டை ஆலந்தூரைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கணகங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயியும் பயிர் கருகிய துக்கம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கணக்கன்குப்பம் விவசாயி முருகன். 55 வயதான பயிர் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் இதுவரை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எத்தனை நாள்தான் நீடிக்குமோ என்று உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications