ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

ஒரு பஸ்சில் சூட்கேசில் துணியால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் 5 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும், தனியார் பஸ் ஒன்றில் தங்கம் கடத்தி வருவதாக திருவள்ளுர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போனில் தகவல் கொடுத்தார். பஸ் குறித்த அடையாளத்தையும் அவர் கூறினார்.

5 KG worth gold were seized from Chennai bound bus

இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்நிலைய போலீசார், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலயில் உள்ள போலீஸ் செக் போஸ்டில் அதிகாலை 3 மணி முதல் ஒவ்வொரு பஸ்சாக சோதனை செய்தனர். அப்போது ஒரு பஸ்சில் சூட்கேசில் துணியால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த பெட்டி யாருடையது என்று கேட்டுள்ளனர். யாரும் பதில் சொல்லவில்லை. டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரிடம் விசாரித்த போலீசார், பஸ்சில் பயணம் செய்த 5 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த தங்கத்திற்கு எந்த ரசீதும் இல்லாமல் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், திருவள்ளுர் எஸ்.பி. சாம்சன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+