கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. பட்டப்பகலில் கைவரிசை !
கோவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்மநபர்கள் 4.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது சிட்டி கோல்ட் என்னும் நகைக்கடை. அங்கே இன்று மாலை ஐந்து மணி அளவில் கொள்ளையர்கள் 4 பேர் கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். கடையில் உள்ள பெண் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த 4.5 கிலோ அளவிலான தங்க நகைகளை அவர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் என தெரிய வந்துள்ளது. நகை கடையின் வாகன ஓட்டுனர் ரியாசுதீன் என்பவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications