என்ன கொடுமை.. மனைவியை அரசு ஊழியரோடு நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது
நாமக்கல்: மனைவியை அரசு ஊழியரோடு நிர்வாணமாக படம் பிடித்து ரூ.5 லட்சம் பணம் பறித்த பெண் உட்பட 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. 56 வயதான இவர் புதுச்சத்திரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையை சேர்ந்த புஷ்பராஜனின் மனைவி விஜயா என்பவர் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். அப்போது அரசு ஊழியரான கருணாநிதிக்கும், விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த விஜயா மருந்துகளை வாங்கிக்கொண்டு இராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஏரிக்கரை அருகே வருமாறும் கருணாநிதி அழைத்துள்ளார். இதையடுத்து கருணாநிதி அன்று மாலை ஏரிக்கரைக்கு சென்றார். இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்குவந்த விஜயாவின் கணவர் புஷ்பராஜன், அவரது நண்பர்கள் தஸ்தகீர், சலீம், சந்திரசேகர் ஆகியோர், அங்கிருந்த கருணாநிதியை கத்தியை காட்டி மிரட்டி இருவரும் உல்லாசமாக இருந்த அக்காட்சியை செல்போனில் படம் பிடித்து அந்த படத்தை கருணாநிதியிடம் காட்டி ரூ.5 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன கருணாநிதி தன் நண்பர்களிடம் கேட்டு வாங்கி. அன்றே அவர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து மிரட்டிய அந்த கும்பல் அவ்வப்போது பணம் பிடுங்கி கொஞ்சம்..கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை கருணாநிதியிடம் இருந்து இக்கும்பல் பறித்துக்கொண்டது. இந்த நிலையில் அந்த கும்பல் மீண்டும் கருணாநிதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
மனம் வெறுத்த கருணாநிதி இதுகுறித்து இராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இந்த புகார் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், இராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதலில், விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் வசிக்கும் தஸ்தீகர் வீட்டில் இருந்த புஷ்பராஜன், தஸ்தகீர் அவருடைய மகன் சலீம் மற்றும் பெரியமணலியைச் சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications