தென்காசி அருகே விபரீதம்... நாட்டு மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நாட்டு வைத்தியர் ஒருவர் கொடுத்த மூலிகை மருந்தை சாப்பிட்ட 5 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.
அழகப்பபுரம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு மாதத்திற்கு முன்பு, முத்துப்பாண்டி என்ற நாட்டு வைத்தியர் வந்துள்ளார். ஊர் மக்களிடம் தன்னை நாட்டுவைத்தியர் என்று கூறிய அவர் அங்குள்ள பலரிடம் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள். உங்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இதைச் சாப்பிட்டால் அது சரியாகும் என்று கூறி மூலிகை மருந்தைக் கொடுத்துள்ளார்.

இதைக் கேட்ட கிராம மக்கள் முதலில் நீங்கள் சாப்பிடுங்கள், பிறகு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து முத்துப் பாண்டி மருந்து சாப்பிட்டார். இதைப் பார்த்த ஒரு பெண் உள்பட 5 பேர் இதை வாங்கிச் சாப்பிட்டனர். இந்த நிலையில் இன்று காலை மருந்து சாப்பிட்ட இருளாண்டி, சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருந்து சாப்பிட்ட மற்றவர்கள் வைத்தியர் வீட்டுக்கு ஓடினர். அங்கு போய்ப் பார்த்தால் முத்துப் பாண்டியும் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து மற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பாலசுப்ரமணியம், சவுந்தரபாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். மருந்து சாப்பிட்ட பெண் சீரியஸாக உள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications