மதுரை அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் சிவகங்கை கோர்ட்டில் சரண்
மதுரை: மதுரை அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரை 72வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியும் ஜனதா கூட்டுறவு சங்க இயக்குநராகவும் இருந்தவர் மயில்முருகன். இவரை கடந்த 24ம் தேதி ஆட்டோவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. 23ம்தேதி திமுக பிரமுகர் குருசாமியின் உறவினர் கஜேந்திரபாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக மயில்முருகன் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது.

இதுதொடர்பாக துணை கமிஷனர் சமந்த் ரோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது., இந்நிலையில் இன்று காலை சிவகங்கை ஜேஎம் கோர்ட் நீதிபதி வெங்கடேசபெருமாள் முன்னிலையில் ஐந்து பேர் சரணடைந்தனர்.

அலெக்ஸ்பாண்டியன், மாதவன், சடையாண்டி, மாடு மணியன் என்ற மணிகண்டன், முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து பேர் வழக்கறிஞர் கருப்பையா மூலமாக சரணடைந்தனர். சரணடைந்த ஐந்து பேரையும் வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் அதன்பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஐந்து பேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications