தமிழகத்தில் டெங்குவுக்கு இன்று 5 பேர் பலி... பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!
டெங்குவுக்கு இன்று மட்டும் 5 பேர் பலியாகிவுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்க்கு இன்று மட்டும் 5 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அன்றாடம் பலி தொடருகிறது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தப் போதிலும் டெங்கு பாதிப்பு என்பது ஓயாமல் இருந்து வருகிறது.

எய்ம்ஸ் குழு ஆய்வு
எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மத்திய மருத்துவ குழு ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் புதுவையில் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று எத்தனை பேர்
டெங்குவால் பாதிக்கப்பட்டு நேற்று 3 பேரும், நேற்று முந்தைய தினம் 9 பேரும் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். இன்று 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் கடந்த 13 நாள்களில் 130 பேரை காவு கொண்டுள்ளது டெங்கு. இதுமட்டுமல்லாமல் வேறு சில மர்மக் காய்ச்சலுக்கும் மக்கள் பலியாகின்றனர்.

5 பேர் பலி
வத்தலகுண்டு அருகே நடகோட்டை பகுதியைச் அம்பிகா, திருசெங்கோட்டில் அணிமூரில் விவசாயி செந்தில், ஆரணி லாடப்பாடி கிராமத்தில் கோபால் என்பவரின் மகள் சாதனா, மதுரை மதுச்சியத்தில் உள்ள கார்த்திகா (21), நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த மைதிலி ஆகிய 5 பேர் இன்று பலியாகினர்.

அரசு மீது புகார்
இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் முழு நேரமும் செயல்படக் கூடிய அளவுக்கு மருத்துவர்கள் இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications