+2 தேர்வில் 50 சிறைக்கைதிகள் பாஸ்; 870 மதிப்பெண் பெற்ற கொலை வழக்கு சிறைவாசி
சென்னை: +2 தேர்வில் மாணவர்கள் பெற்ற சாதனையை போலவே சிறையிலுள்ள கைதிகளும் சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 58 கைதிகள் கடந்த மார்ச் மாதம் நடந்த +2 தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
இதில், தேர்வு எழுதிய 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 6 பேர் தோல்வி அடைந்தனர். 2 பேர் தேர்வு எழுதவில்லை.
இவர்களுள், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி சுந்தரம் 1,200-க்கு 870 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தேர்ச்சி பெற்ற அனைவரும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக பட்டம் படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் கல்வி பெற சிறை நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என, கோவை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications