தலித் இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த 'கொடூரம்': 6 பேர் கைது- 3 பேர் ப்ளஸ் டூ மாணவர்கள்!!
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை அடித்து சித்ரவதை செய்து வாயில் சிறுநீர் கழித்த 'ஜாதி கொடூரன்கள்' 6 பேரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஜாதி வெறி கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியது.

அடிதாங்க முடியாமல் தண்ணீர் கேட்ட அந்த இளைஞரின் வாயில் ஜாதி கும்பல் சிறுநீர் கழித்திருக்கிறது. இந்த ஜாதிவெறி கொடுமை அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரன், ரகுபதி, தங்கராஜ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications