சேகர் ரெட்டி, ராம மோகன ராவுடன் 6 அமைச்சர்கள் நெருக்கம்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர்கள் சிலரும் ராம மோகன் ராவ் உடன் நெருக்கமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவரது நண்பரான தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ராம மோகன்ராவின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் பணமும் 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ராம மோகன் ராவ் மற்றும் சேகர் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி சில தொழில் அதிபர்களும் ராம மோகன் ராவுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு இடையே பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனையால் மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த அனைவர் மீதும் சந்தேகம் உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் அடுத்தடுத்து சோதனைகள் தொடரும் என்று கூறிய அவர் ஆனால் எங்கு, எப்போது சோதனைகள் நடக்கும் என தெரியாது என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications