பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்து போராட்டம்.. மகிழ்ச்சியில் திளைக்கும் மோடிக்கு எட்டுமா தமிழர் கூக்குரல்!
இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றிக் களிப்பில் இருக்கும் மோடிக்கு மீ
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு உரிய நியாயம் வேண்டும் என்று கோரி உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களும் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர நேற்று கூட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இவர் அளித்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அப்படி என்னதான்..
தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது, படகுகளை பிடுங்கிக் கொள்வது, வலைகளை அறுப்பது போன்ற அட்டூழியத்தை செய்து வரும் இலங்கை கடற்படை கட்டுப்படுத்த இந்தியாவில் முடியாதா? இதைத்தான் போராட்டக்காரர்கள் கேட்கிறார்கள்.

குறைந்தபட்சம்..
பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். வெளியுறவுத் துறை செயலர் நேரில் வந்து மீனவர்கள் மீதான தாக்குதல் இனி தொடராது என உறுதி அளித்தால் போராட்டம் நிறுத்தப்படும். இந்த குறைந்தபட்ச கோரிக்கையைத் தானே மீனவர்கள் 6 நாட்களாக கேட்டு வருகின்றனர்.

ஏன் மவுனம்
இந்தியாவின் தென் கோடியில் மக்கள் மரணத் துயரத்தில் துவண்டிருக்கும் வேலையில் ஒரு பிரதமராக இருக்கும் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்பதுதான் மீனவர்களின் கேள்வியாக இருக்கிறது. இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க அவரை தடுப்பது எது?

சுஷ்மாவா யார் அவர்?
வெளிவிவகாரம் என்ற அதிமுக்கியம் வாய்ந்த துறைக்கு அமைச்சராக உள்ள சுஷ்மா, தமிழக மீனவர்கள் பிரச்சனை என்றால் தூக்க நிலைக்கு சென்றுவிடுவார். சவுதியில் யாராவது ஒருவருக்கு பிரச்சனை என்றால் மட்டும் தூக்கத்தில் இருந்து எழுந்து குரல் கொடுத்துவிட்டு மறுபடியும் தூங்கிவிடுவார்.

மகிழ்ச்சியில் காதடைப்பு
ஐந்து நாட்களாக தமிழக மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பதில் சொல்லாத மோடி, தற்போது உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இனி அவருக்கு சுத்தமாக காது கேட்காது என்பது மட்டும் உறுதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications