6ம் வகுப்பு மாணவியை கழிவறையில் வைத்து பாலியல் தொந்தரவு- தமிழாசிரியர் கைது!
திருச்சி: திருச்சியில் 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தமிழ் ஆசிரியரை திருச்சி உறையூர் போலீசார் கைது செய்தனர். பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூரில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துடன் செயல்படக்கூடிய அரபிந்தோ இண்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அம்மாப்பேட்டையை சேர்ந்த ரூபன் தமிழாசிரியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை பள்ளி தொடங்கி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது பள்ளி இடைவேளையின்போது, 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
அந்த மாணவியை பின்தொடர்ந்து ஆசிரியர் ரூபனும் உள்ளே சென்று, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் பயந்து போன மாணவி கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். அதன்பிறகு பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளார்.
இதைகேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இது பற்றி முறையிட்டனர்.
உடனே ஆசிரியர் ரூபனை அழைத்து விசாரித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். இதற்கு இடையில் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டதும் இது பற்றி உறையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த உறையூர் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கு மாணவியின் பெற்றோரிடமும், ஆசிரியர் ரூபனிடமும் விசாரித்தனர். பின்னர் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனையிட்டனர்.
அப்போது அந்த கேமராவில் மாணவி கழிவறைக்கு சென்றதும், அவரை பின்தொடர்ந்து ஆசிரியர் ரூபனும் பதுங்கி, பதுங்கி உள்ளே சென்றதும் பதிவாகி இருந்தது.
அதன்பிறகு சில நிமிடத்தில் மாணவி கழிவறையில் இருந்து அலறி கொண்டு வெளியே ஓடி வந்ததும், இதையடுத்து ரூபனும் கழிவறையில் இருந்து வெளியே சென்றதும் தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கண்ட பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆசிரியர் ரூபனை சரமாரியாக தாக்கினார்கள். உடனே உறையூர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் ரூபனை கைது செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications