மீண்டும் கிளம்பிய கெய்ல் புயல்... போராடத்தயாராகும் 7 மாவட்ட விவசாயிகள்
சென்னை:கெய்ல் எரிவாயு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 7 மாவட்ட விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
தமிழகத்திற்குபிரயோஜனமில்லாத கெய்ல் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட தயாராகி வருகின்றனர் மேற்கு மாவட்ட விவசாயிகள்.
இந்தியாமுழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டத்தினை மத்திய அரசின் கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

திமுக அரசின் தவறு
எரிவாயு பதிக்கும் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வராமலேயே,வேறு பாதையில் கர்நாடகத்துக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்த அப்போதைய தி.மு.க அரசு, வழக்கம் போல் இந்த திட்டத்துக்கும் அனுமதி கொடுத்தது.

தேவையில்லாத வேலை
கேரளாவில் இருந்து நேரடியாக கர்நாடகா வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்,ஆனால் தமிழகத்தில் விளைநிலங்களின் வழியாக குழாய்களை பதித்து எரிவாயு கொண்டு போக திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மாபெரும் போராட்டம்
2011ம் ஆண்டில்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு , நாமக்கல், சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர்.இறுதியாக தமிழக அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி,விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவித்ததோடு சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றியது.

கெய்லுக்குக் கை கொடுத்த கோர்ட்
இதனை எதிர்த்து கெய்ல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டவே, தீர்ப்பு கெய்ல் நிறுவனத்திற்கு சாதகமாக வந்தது. தமிழக அரசும், விவசாயிகளும், உச்சநீதிமன்றத்தை நாடியதால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பல சட்ட போராட்டங்களை நடத்திய கெய்ல் இறுதியில் தனக்கு சாதகமான தீர்ப்பினை உச்சநீதிமன்றத்திடம் இருந்து பெற்றுள்ளது.

அதிர்ச்சியில் விவசாயிகள்
தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடுவிளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புதான்மேற்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டவிவாயிகளை பதற்ற மடையவைத்துள்ளது.இந்த திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலத்தின் மதிப்பில்40 சதவீதம் மட்டும் மத்திய அரசு வழங்குமாம். அப்படியென்றால் மீதி தொகைக்குஎன்ன செய்வது என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு
சுமார் ரூ. 3,400 கோடி மதிப்பீடு கொண்டகொச்சி-குட்டநாடு- பெங்களூரு-மங்களூரு வரையிலான எரிவாயு குழாய் கொண்டு செல்லும் இந்த திட்டத்தால் சுமார் 5 ஆயிரத்து 500 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிறது ஒரு ஆய்வு. கெய்ல் எரிவாயு திட்டத்தால்தமிழகத்துக்கு இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை.

கிராமங்கள் அழியும்
ஆனால் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால், கோவை மாவட்டத்தில் 16 கிராமங்கள், திருப்பூரில் 22 கிராமங்கள்,ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்கள், நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்கள், சேலத்தில் 29 கிராமங்கள், தர்மபுரியில் 27 கிராமங்கள், கிருஷ்ணகிரியில் 18 கிராமங்கள் வழியாக பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட வேண்டும்.இந்த பைப் லைன் மொத்தம் 871 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படுகிறது.

60 கி. மீக்காக 811 கிலோமீட்டருக்கு நாசம்
இதில் 501 கிலோமீட்டர் கேரளாவுக்குள்ளும்,310 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்திற்குள்ளும், இந்த திட்டத்தால் மொத்த பயனையும் அடையப் போகும் கர்நாடகாவுக்குள் வெறும் 60 கிலோ மீட்டர் தொலைவுதான் பயணிக்கிறது.

போராட்டத்தில் குதிக்கும் விவசாயிகள்
கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்திய அமைப்புகளில் ஒன்றான தற்சார்பு விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பொன்னையன், கெயல் எரிவாயு திட்டம் மீண்டும் இங்கு செயல்பட வந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் தங்களின் உயிரைக்கொடுத்தாவது தடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

விவசாயிகளை ஏமாற்றிய அதிமுக
ஆளுங்கட்சியான அதிமுக விவசாயிகளை ஏமாற்றி கபட வேடம் போட்டுவிட்டது. நீதிமன்றத்தில் மக்கள்பாதிப்பு, விவசாயிகளின் உணர்வுகளை வேதனையை தெரிவிக்கவில்லை. கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக பின்வாங்கிவிட்டது. ஆகவே, இப்பகுதி விவசாயிகளின் போராட்டம் கெயில் நிறுவனத்திற்கு எதிராகவும் இந்த ஆட்சிக்கு எதிராகவும் நிகழ உள்ளது என்றார்.உடனே, கெயில் நிறுவனத்தின் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், மேற்கு மண்டலம் போராட்ட பூமியாகும் என்றும் கூறியுள்ளார் பொன்னையன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications