அதிமுக, திமுகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் களையெடுப்பு ஆரம்பம்..7 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் !
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்தப் பிறகு அதிமுக, திமுகவில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட நிலையில், காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்த பகுதிகளின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திமுகவிலும், சேலம், நாமக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டித் தலைவராக பதவி வகிக்கும் பூவை பீ.ஜேம்ஸ், வெங்கடாசலம், எஸ்.ராஜ்குமார், கே.ராம்நாத்,எஸ்.கே.டி.பி.காமராஜ், வி.பாலையா, கே.டி.ராஜகுமாரவேல் ஆகியோர் நீக்கப்பட்டு, புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட பொறுப்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
புதிய பொறுப்பாளர்கள் விவரம்:
திருவள்ளூர் தெற்கு - ஜெ.பாலமுருகன்
திருப்பூர் புறநகர் - கே.தென்னரசு
நாகப்பட்டிணம் வடக்கு- டி.சொக்கலிங்கம்
திருநெல்வேலி மேற்கு - எஸ். பழனி நாடார்
திருநெல்வேலி மாநகர்- டி.எல்.உமாபதி சிவன்
கன்னியாகுமரி கிழக்கு - ஆர்.ராதாகிருஷ்ணன்
கிருஷ்ணகிரி - எஸ்.நாரயணமூர்த்தி
ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளாத இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications