விரட்டப்படும் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்த 7 பேர் குழு- திடீர் திருப்பம்!
சென்னை: அதிமுகவை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி நடுவே இணைப்பு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. ஆனால் இரு அணிகள் இணைய உறுதியாக உள்ளன. இரு அணிகளுக்குமே மற்றொரு அணியின் தயவு தேவைப்படுகிறது.
இதனால் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்கி வர இரு தரப்பும் தயாராகியுள்ளது. இரு தரப்பும் இறங்கிவராவிட்டால் டிடிவி தினகரன் தரப்பு கரம் ஓங்கிவிடும் என்ற அச்சம் இரு அணிகளுக்கும் உள்ளது.

ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில், அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று முதல்வர் அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலம், இணைப்பை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை
குழுக்கள் கலைக்கப்பட்டாலும் இணைப்பு பேச்சுவார்த்தை தொடருகிறது. ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர் என்றார் அவர். இதனால் அதிமுக தொண்டர்கள் குஷியாகியுள்ளனர்.

7 பேர் குழு
இதனிடையே, கட்சியை வழிநடத்த இரு அணிகளை சேர்ந்த எழுவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும்,
வழிநடத்தும் குழுவின் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் பதவி
ஓபிஎஸ் அணியின் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால், எடப்பாடியே முதல்வராக தொடரலாமாம். அதிமுக தலைமை பதவிக்கு ஈடான பதவி இந்த குழு தலைவர் பதவி. எனவே டிடிவி தினகரன் டம்மி செய்யப்படுவதாக தெரிகிறது.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications