பஞ்சாயத்து டிவி ரூம் சாவிக்காக தகராறு - ஒருவர் பலியான சம்பவம்; 7 பேருக்கு 10 ஆண்டு சிறை!
தருமபுரி: தருமபுரியில் பஞ்சாயத்து அலுவலக அறை சாவி வைத்திருப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியான சம்பவத்தில் 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகிலுள்ள வேப்பம்பட்டி கிராமத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் இரவு தேதி அங்குள்ள பஞ்சாயத்து தொலைக்காட்சிப் பெட்டி வைத்துள்ள அறையை பூட்டி, திறப்பது தொடர்பாக அப்பகுதியினரிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர்தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அரூர் போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன்கள் சண்முகம், அமரவேல், அன்பழகன், ஆசைத்தம்பி மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கராஜ், சேகர், சிதம்பரம் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஆர்.லதா, குற்றவாளிகள் சண்முகம், அமரவேல், அன்பழகன், ஆசைத்தம்பி, தங்கராஜ், சேகர், சிதம்பரம் ஆகிய 7 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இவர்கள் தவிர குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறார் நீதிக்குழும நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், சண்முகம், அமரவேல், அன்பழகன், சேகர் ஆகியோருக்கு தலா ரூபாய் 3 ஆயிரமும், ஆசைத்தம்பி, தங்கராஜ் ஆகியோருக்கு தலா ரூபாய் 1000, சிதம்பரத்துக்கு ரூபாய் 2 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications