இந்தி எதிர்ப்பு.. பூரண மதுவிலக்கு.. போராட்டங்கள் தொடரும்.. திமுக மா.செ. கூட்டத்தில் 7 தீர்மானங்கள்
இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி தொடர் கருத்தரங்கள் நடத்தப்படும் என்றும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக பொதுச் செயலளாளர் க. அன்பழகன், திமுகவின் கட்சிப் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தி திணிப்பிற்கு எதிராக மாநில முழுவதும் திமுக சார்பில் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடத்தப்படும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தரும் 2 மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுஅடைப்பு போராட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரும் நன்றி ஆகிய 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications