ஒன்னேகால் பவுன் நகைக்காக 70 வயது தாத்தா அடித்துக் கொலை
சேலம்: சேலத்தில் ஒன்னேகால் பவுன் நகைகளுக்காக 70 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மூக்கனூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(70). அவர் கடந்த 15 ஆண்டுகளாக சேந்தமங்கலத்தை அடுத்து உள்ள கொல்லிமலை பூங்குளம்பட்டியில் வசித்து வந்தார். அவர் மலைவாழ் மக்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் இருந்த ஈஸ்வரன் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர்.
போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கொல்லிமலை கரையான்காட்டுப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(24), தங்கராஜ்(38), பிரபாகரன்(24) ஆகியோர் திண்ணணூர் பொறுப்பு வி.ஏ.ஓ. மாதேஸ்வரன் முன்பு நேற்று காலை சரண் அடைந்தனர். அவர் அந்த 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் முதியவரை அடித்துக் கொன்றுவிட்டு அவர் வீட்டு பீரோவில் இருந்த முக்கால் மற்றும் அரை பவுன் மோதிரங்களை திருடிச் சென்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைக் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications