75-வயது மூதாட்டியை சரமாரியாக தாக்கிய போலீஸ்.. சீரியஸான நிலையில் மூதாட்டிக்கு சிகிச்சை
சிவகங்கை: சிவகங்கை அருகே குடும்பப் பிரச்சனை குறித்த விசாரணையின் போது 75-வயது மூதாட்டி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், தவசக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொங்கை ஈஸ்வரன். விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இதனிடையே ஈஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது சாந்திக்கு தெரியவரவே கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாந்தி அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரனையும், அவருடைய 75 வயதான தாயார் வெள்ளச்சியையும் காளையார் கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, விசாரணையின்போது, ஈஸ்வரன் மற்றும் வெள்ளச்சி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், வெள்ளச்சி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாராம். இதனால், வெள்ளச்சியை வீட்டுக்கு கொண்டு போகும் படி போலீஸார் கூறினார்களாம். வீட்டுக்கு வந்த பின்னரும் மூதாட்டிக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால், அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மூதாட்டியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர்.
இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில், குடும்பச் சண்டை தொடர்பாக எனது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்வதாக கூறி என்னை போலீஸார் இழுத்துச் சென்றனர். எனது அம்மாவும் என்னுடன் வந்திருந்தார்.
விசாரணை என்ற பெயரில் என்னையும் என் தாயையும் காவலர்கள் லத்தியால் கடுமையாக தாக்கினர். மேலும், இரண்டு மகளிர் காவலர்களும் சேர்ந்து தாக்கினார்கள். வயதானவர் என தெரிந்தும் பூட்ஸ் காலால் உதைத்தார்கள். எனது தாய் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். தற்போது அவர் சீரியஸான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் சிவகங்கை மாவட்ட எஸ்பிக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர். சாதாரண குடும்பச் சண்டைக்கு மூதாட்டி என கூட பார்க்காமல் காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications