வர்தா புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் பலி - ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம்: வர்தா புயலின் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் திங்கட்கிழமை பிற்பகல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது 120 கி.மீ. வேகத்தில் சூரைக்காற்று வீசியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான மரங்கள், விளம்பர பலகைகள், வீடுகள் இடிந்து நாசமானது. இதைத் தொடர்ந்து இந்த மூன்று மாவட்டங்களிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கஜலட்சுமி கூறுகையில், வர்தா புயலால் மாவட்டம் முழுவதிலும் 8,330 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல் 130 மின்மாற்றிகள், 27 உயர் மின்அழுத்த கோபுரங்களும் சேதமடைந்துள்ளது.
சூறைக்காற்றால் 18,120 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும், 1,350 உட்புற சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புயல் காற்று உள்ளிட்ட இன்னல்களில் சிக்கிய 8 பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம் இல்லாத இடங்களில் தேவையான அளவு மண்ணெண்னை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications